Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க   புகார் குழு

ஜுன் 05, 2023 05:15

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக  பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க 2013 சட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,  கல்வி நிறுவனங்கள், சிறு குறு  தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் உள்ளக புகார் குழு அமைத்திடவும், பாதுகாப்பு புகார் பெட்டகத்தினை வைத்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  துரை.இரவிச்சந்திரனிடம் அறிவுறுத்தப்பட்டது. 

இதில் 10 -ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் அனைத்து அலுவலங்களிலும்  தலைவர்  மற்றும் உறுப்பினர்கள் என 4 பேர் அடங்கிய உள்ளக புகார் குழுவினை அமைத்திடும் விதம் குறித்து விவரிக்கப்பட்டது.இதுகுறித்த  விவரங்களை  ஒரு வார  காலத்திற்குள்  ‌தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளபட்டது. 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி,  மாவட்ட ஆட்சித்தலைவர்  நேர்முக உதவியாளர் முத்து மாதவன், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை அலுவலர் மதி வதனா, மாவட்ட கலால் ஆணையர்  மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்  சங்கர நாராயணன்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்  நடராஜன் ஆகியோர் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்