Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் பிறந்த தினத்தையொட்டி குழந்தைகளுக்கு மோதிரம் 

ஜுன் 07, 2023 11:37

பாவூர்சத்திரம: தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த தின விழா பல்வேறு நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், கரும்பனூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, கலைஞர் பிறந்த தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் நசீர், நிர்வாகிகள் காளிமுத்து, செல்வகுமார், முத்துப்பாண்டி, மயில்ராஜ், காளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்