Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி :-  கலெக்டர் துரை.இரவிச்சந்திரன் 

ஜுன் 07, 2023 11:39

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் மூலம் பயன் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்  நடைப்பெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசிமாவட்டத்தை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 9-மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 

மேலும் 5-மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலிகள் தலா ரூ.90,000/-மதிப்பில் மொத்தம் ரூ.4,50,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.  கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  ஜெயபிரகாஸ், பயிற்சி ஆட்சியர் கவிதா,
செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் மற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவிலான வெளிப்படுத்தல் (District Implementation Committee for RightsProject) குழு கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட அளவிலான அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்