Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை

ஜுன் 10, 2023 06:58

சுரண்டை: சாம்பவர்வடகரை பெரியகுளத்தில் தடுப்புச் சுவர் அமைத்து, படகு குழாம் அமைத்து தர வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாம்பவர்வடகரை பேரூராட்சி 14வது வார்டு பகுதியியில் பெரியகுளம் அமைந்துள்ளது. 
இக்குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைத்து, படகு குழாம் அமைத்து தர வேண்டும்.

ஏற்கனவே சாம்பவர்வடகரை கிராமத்தில் அதிகமான சூரியகாந்தி விளைச்சல் உள்ளதால் அண்டை மாநிலமான கேரளா,  பாண்டிச்சேரி மற்றும் கர்நாடக மாநில மக்கள் தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வருகை தரும் சமயத்தில் இங்கு வந்து , சூரியகாந்தி பூக்களை கண்டு களித்து தங்கள் குடும்பத்தோடு இங்குள்ள பெரியகுளத்தில் படகு குழாம் அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவே இங்கு படகு குழாம் அமைத்திட நிதி ஒதுக்கி பணி ஆனை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என அந்த மனுவில் கூறியுள்ளார்.

அப்போது, சுற்றுலாத்துறை ஆணையர் சந்திப்நந்தூரி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, சாம்பவர்வடகரை பேரூர் செயலாளர் முத்து (எ) செல்லக்கனி, ஒன்றிய பிரதிநிதி முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்