Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி விலையில்லா தையல் இயந்திரங்கள்: எம்.பி கருணாநிதி

ஜுன் 12, 2023 08:16

தூத்துக்குடி: தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக சார்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் நூறு பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கினார்.

பின்னர்,நிகழ்வில் கனிமொழி எம்.பி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்