Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது: ஆளுநர் மாளிகை தகவல்

ஜுன் 16, 2023 07:12

சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் முறைகேடு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

தற்போது அவருக்கு உடல் நிலை மோசமாக உள்ளக் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டே நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது துறைகளான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையானது அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதலமைச்சர் பரிந்துரைத்தற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார். 

எனினும், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். 
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது. குற்ற வழக்கை எதிர்கொண்டு வருவதாலும், நீதிமன்ற காவலில் இருப்பதாலும் அமைச்சரவையில் நீடிக்க கூடாது என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்