Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

ஜுன் 23, 2023 09:51

தென்திருப்பேரை:  பிரதமர் மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் 9 ஆண்டு சாதனையை வீடு, வீடாக கொண்டு சேர்க்கும் பணியாக பா.ஜ.க. ஆட்சியில் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தென்திருப்பேரை சன்னதி தெருவில் தொடங்கப்பட்டு பல்வேறு தெருக்களில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், வக்கீல் பிரிவு தலைவர் கண்ணன், பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வி, சந்தியா, அமைப்பு சாரா மக்கள் சேவைபிரிவை சேர்ந்த சிவசந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் பொதுமக்களிடம் வருகிற 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வாசகத்திற்கு இணங்கி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்