Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்

ஜுன் 24, 2023 11:43

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுப்பட்டி ஒன்றிய ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகள் பத்துக்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்தப் அரசு பள்ளியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் மதிய உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து 10.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் அருகே உள்ள அரமத்தாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்பு மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர்.

மாணவ மாணவிகள் மயக்கம் அடைந்ததை அறிந்த பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இந்நிலையில் தகவலறிந்து வந்த குழந்தைகள் நல காப்பாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தைகள் நலமுடன் உள்ளனரா என விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பெற்றோர்களும் கடுமையான வாக்குவாதம் முற்றியது.
 இந்நிலையில் மருத்துவ குழுவை வரவழைத்து மீண்டும் பிள்ளைகளை பரிசோதித்து அனுப்புவதாக அதிகாரிகள் கூறி சமாதானப்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள பழங்குடியினர் பள்ளியான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தலைப்புச்செய்திகள்