Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழுநீர்குளம் ஊராட்சி நிர்வாகிகள் திமுக மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

ஜுன் 24, 2023 05:36

பாவூர்சத்திரம்: கழுநீர்குளம் ஊராட்சி நிர்வாகிகள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் காலமானதையடுத்து, அவ்வூராட்சி நிர்வாக பணிகள் நடைபெற வேண்டி துணைத்தலைவராக இருந்த செல்லப்பா, தலைவராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பு அளித்துள்ள முருகன் உள்ளிட்டோர், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவன்பாண்டியன் தலைமையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர் தாமரைச்செல்வன், வார்டு உறுப்பினர் அச்சுதபாண்டியன், சத்தியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்