Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ஜுன் 26, 2023 11:15

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், நாமக்கல் நகரில் பாஜக வின் 9 ஆண்டுகள் சாதனையை பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜஹான் கலந்து கொண்டு, சிறுபான்மை சமூகத்தினருக்காக கடந்த 9 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

தேசிய பொதுக்குமு உறுப்பினர் மனோகரன் பேசும்போது, பாஜகவில் சிறுபான்மையினரை ஒன்றிணைத்து செயல்படும் போது பாஜக கட்சி மேலும் வலுவடைகிறது என்றும், சிறுபான்மையினர் பாஜகவின் மிகப் பெரிய அங்கமாகவும் அசைக்க முடியாத, நம்பிக்கை தரக்கூடிய பங்காக விளங்குகிறது என்று கூறினார்.

மேலும் மாநில எஸ்டி பிரிவு தலைவர் சிவப்பிரகாசம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவிற்கு சிறுபான்மை சமூகத்தினர் ஆதரவு கூடி வருகிறது, இது கட்சியின் வளர்ச்சிக்கு  ஊக்கமளிக்கிறது. வருகிற 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்விலாஸ் பிரபு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் பிரபு வரவேற்றார். முடிவில் சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் ஷாஜஹான் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்