Saturday, 22nd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெங்காடம்பட்டி ஊராட்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஜுன் 28, 2023 08:26

கடையம்: வெங்காடம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலாரவி தொடங்கி வைத்தார்.

மேலும் கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சியில், மாதாப்பட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்ஸாருகலாரவி தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி ஊராட்சியில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் பங்கேற்ற மாணவர்கள், போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்திச்சென்றனர். வார்டு உறுப்பினர் ரேகா, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பீட்டர்ராஜ், உதவி திட்ட அலுவலர் பொன்ராஜ் செபஸ்தியான் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்