Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகல்குளத்தில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

ஜுன் 30, 2023 05:28

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், நாகல்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சத்தில், கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ்பாண்டியன் பங்கேற்று, கட்டடத்தினை திறந்து வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணி மாநில அமைப்புச் செயலர் சௌ.இராதா, மாவட்டச்செயலர் வி,கே.கணபதி, மாநில தொழிற்சங்கச்செயலர் எஸ்.ஏ.சேர்மத் துரை, ஒன்றியக்குழு உறுப்பினர் ராதாகுமாரி, ஊராட்சித்தலைவர் கோமதி நாச்சியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்