Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெட்டியார்பட்டியில் திமுக சார்பில் நல உதவிகள் 

ஜுன் 30, 2023 06:26

ஆலங்குளம்​:​ திமுக தென்காசி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் வி.ரெட்டியார்பட்டியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்களுக்கு தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கிப் பேசினார்.ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். 

இதில் மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரி பாலகுமார், முத்துமாரி ரமேஷ், காவலாக்குறிச்சி ஊராட்சி  துணைத் தலைவர் செல்வராஜ், கீழக்கலங்கல் ஊராட்சித் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தட்டப்பாறை கணபதி, மாணவரணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், தொழிலதிபர்கள் மாரிதுரை, மணிகண்டன், கிராம கமிட்டி பள்ளி தலைமை ஆசிரியர் குகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கடங்கனேரி அய்யம்பெருமாள், துணை அமைப்பாளர்கள் மாஸ்டர் கணேஷ், முகைதீன்கனி, பொன்னரசு, சிம்சோன்ராஜ், முத்தரசி காளித்துரை, அஜய்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்