Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரன்கோவிலில் பாஜக பட்டியல் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பிரச்சாரம்

ஜுன் 30, 2023 07:46

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் பாஜக பட்டியல் அணி சார்பில் மத்திய 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு  தென்காசி மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் ராமர் தலைமை வகித்தார். 

இதில் பாஜக மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் பேராசிரியர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார்.  சங்கரன்கோவில் நகரத் பாஜக தலைவர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.  தென்காசி மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் பாலகுருநாதன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

மேலும் பிரச்சாரக் கூட்டத்தில் நகர பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், கோமதிநாயகம், நகர செயலாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சண்முகையா, ஓபிசி அணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், நெல்லை மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்