Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்: அமைச்சர் சிவசங்கர்

ஜுலை 01, 2023 07:25

சங்கரன்கோவில்:  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு போக்குவரத்து பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் பணியாளர்கள் ஓய்வறை அமைக்கும் பணி, மற்றும் தென்காசி எம்பி நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சுத்தப்படுத்தும் இயந்திரம் அமைக்கும் பணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

மேலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி , யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். அதனை தொடர்ந்து எம்பி தனுஷ் குமார், எம்.எல்.ஏக்கள்  ராஜா, சதன், திருமலை, குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் பேசும்போது தொழிலாளர் ஓய்வறை அடிப்படை வசதி ஏற்படுத்திய தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது அதனை நிறைவேற்றும் வண்ணமாக எம்.எல்.ஏ ராஜா, சங்கரன்கோவில் பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி சீனிவாசன், பரமகுரு, பத்மநாதன், முத்துச்செல்வி, புனிதா, ராஜதுரை, பெரியதுரை, மதிமாரிமுத்து, பிரகாஷ்,  கௌசல்யா, வெங்கடேஷ், செல்வராஜ், அலமேலு, விஜயகுமார், கே.எஸ்.எஸ். மாரியப்பன், ஜெயக்குமார், சதீஷ், சரவணன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்