Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லிமலையில் மின்தடையை சீரமைக்க கோரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஜுலை 03, 2023 04:39

நாமக்கல்: கொல்லிமலையில் சேளூர் நாடு கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், தங்கள் பகுதியில் 2 மாதங்களாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை சீரமைக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சேளூர் நாடு கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள சேளூர்நாடு கிராமத்தில், மின்சார டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால், கடந்த 2 மாதமாக மின்சாரம் விநியோகம் இல்லை.

இதனால் சேளூர் நாடு பகுதி முழுவதும் மக்கள் இரவு தோறும் இருட்டில் சிரமப்பட்டு வருகிறோம். பகல் நேரத்தில் மின்விசிறி இயக்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இது குறித்து மின்சார வாரிய அலுவலர்களிடம் தகவல் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக மின் இணைப்பு வழங்கி, சேளூர் நாடு இருளில் மூழ்கி இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் கொல்லிமலை நெடுங்கா புளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் வழியாக செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர்.

மின்சார ஒயரை மாற்றி, பள்ளி சுற்று சுவருக்கு வெளியில் அமைத்து தர வேண்டும், மேலும் மின்கம்பம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சேளூர் நாடு கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில், கேட்டுக் கொண்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்