Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாட அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த விவசாயிகள் கோரிக்கை

ஜுலை 03, 2023 04:41

நாமக்கல்: காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர், கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று, விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக காவிரி டெல்டா வியாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக உள்ளது. 

இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் தற்போது, சுமார் 5 லட்சம் ஏக்களில் தற்போது நடவுப்பணி மற்றும் நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை பொழியாததாலும், அணையில் இருந்து பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தன்ணீர் திறந்துள்ளாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழ் வெகுவாக குறைந்து வருகிறது.

குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதம் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் பருவமழை இயல்பாக பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி அணையிலிருந்து திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அணையில் இருத்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முழுமையாக கடைமடை சென்று சேரவில்லை.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை எற்படுமோ என்று டெல்டா விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

காவிரி தி நீர் ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.1 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். இதை வழங்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் பிடிவாதமாக பேசி வருகிறார்.

காவிரி நதி நீர் ஆணை உத்தரவுப்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கினால் தான், தமிழக டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

எனவே காவிரி டெல்டா விவசாயிகளன் நலன் கருதி, தமிழக முதல்வரும், நீர்ப்பாசன அமைச்சரும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும், கர்நாடகா அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, காவிரியில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்