Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆதிதிராவிடர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் து.கலாநிதி நியமனம்: அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ வாழ்த்து

ஜுலை 03, 2023 04:51

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலஉரிமை பிரிவு அணியின் மாவட்ட அமைப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளர். 

இதனை தொடர்ந்து நாமக்கல் நகர மன்ற தலைவர் து.கலாநிதி, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோரை நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ப.ராணி, ஒன்றிய செயலாளர்கள் வி.கே.பழனிவேல், எம்.பிகௌதம், பெ.நவலடி, ஆர்.ஜெயபிரகாஷ், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், எஸ்.பூபதி அ.சிவக்குமார், பேரூர் செயலாளர் செல்லவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்