Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலவச மருத்துவ முகாம்

ஜுலை 03, 2023 07:17

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே அமைந்துள்ள பி.எஸ். ராமசாமி ராஜா திருமண மண்டபத்தில் ராம்கோ குழும்ப முன்னாள் தலைவர் பி.ராமசுப்பிரமணி ராஜாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராம்கே குழும்பம் மற்றும் வேலம்மாள் மருத்துவமனை மற்றும் சக்கராசா கோட்டை சத்திரியராஜ பெருமாள் சபை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்த முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ், எம்.குமார் இராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, ஷ்யாம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்த மருத்துவ முகாமில் இசிஜி பரிசோதனை அல்ட்ரா சவுண்ட், ஸ்கேன், ரத்த பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன. இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்