Saturday, 5th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் 

ஜுலை 04, 2023 01:20

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் ஏறத்தாழ 4000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் மாணவர்கள் குடிப்பதற்கு கூட குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

இந்திய மாணவர் சங்கம் நீண்ட நாட்களாக கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன் நிறுத்தி வந்தது.10/04/2023 அன்று முதல் கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரி தொடர் போராட்டம் நடைபெற்றது. 

அந்தப் போராட்டத்தில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரிடம் மாணவர்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லை என மாணவர் சங்கம் கோரிக்கையை முன் வைத்தது. 

அதன் அடிப்படையில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தனது நிதியிலிருந்து ரூ. 6,11,015 ஒதுக்கீடு செய்து LPH கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு  பொருத்தப்பட்டுள்ளது. 

புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத்தை வனத்துறை அமைச்சர்  மதிவேந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா, மாநிலங்களவை உறுப்பினர் K.R.N இராஜேஸ்குமார் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். 

இந்திய மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் போராட்டம் தற்போது வெற்றியடைந்துள்ளது. எனவே இதற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் பானுமதி, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இதற்கு நிதி ஒதுக்கிய மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.ராஜேஸ்குமார் ஆகியோருக்கு இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைப்புச்செய்திகள்