Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசியில் மக்கள் நலப் பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் 

ஜுலை 05, 2023 06:31

தென்காசி: தென்காசியில் மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு பேஜ் அணிந்து  தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவநல்லூர் எஸ். முருகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்காசி எம்.முத்துசாமி அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு  மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமனை ஆணை வழங்கிட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

நீண்ட தொலை தூரங்களில் பணிபுரிந்து வரும் மக்கள் நலப் பணியாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சிக்கு  பணியிட மாறுதல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். கடந்த 01.07.2022  அன்று பணியில் சேர்ந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள், இறந்துவிட்ட பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வே.புதியவன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.திருமலை முருகன், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் வே.வெங்கடேஷ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் க.மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கே.மாடசாமி, ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றுகிறார்கள். 

முடிவில் தென்காசி மாவட்ட மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.அருணாசலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் குருவிகுளம் ஆர்.தர்மராஜ், மேல நீலிதநல்லூர் லெட்சுமி, துணைச் செயலாளர்கள் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி, மு.திராவிட மணி மாநில செயற்குழு உறுப்பினர்கள், சங்கரன் கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டார சிவன், தென்காசி அந்தோணி செல்லத்துரைச்சி, கடையநல்லூர் ராஜேந்திரன், மற்றும் மக்கள் நல பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்