Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருத்தணி அரசு மருத்துவமனையில் ரூ. 45 கோடியில் புதிய கட்டிட பணிகள் தீவிரம்

ஜுலை 06, 2023 12:06

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ரூ. 45 கோடியில் புதிய கட்டிட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

திருத்தணி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 120 க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 

இது தவிர கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட படுக்கை அறைகள் உள்ளன. மேலும், அரசு மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. 

இந்நிலையில், விபத்துக்களில் சிக்கி பலத்தகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதிகள் திருத்தணி அரசு மருத்துவமனையில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

எனவே, நோயாளிகள் மேல் சிகிச்சை பெறுவதற்கு திருவள்ளூர், சென்னை அரசு பொதுமருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டதால், கடந்தாண்டு சட்டசபையில் திருத்தணி அரசு மருத்துவமனையை, தரம் உயர்த்தி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து தரம் உயர்த்துவதற்கு அரசாணை வழங்கினார்.

இதையடுத்து புதிய மருத்துவமனை கட்டடங்கள், ஏற்படுத்த, ரூ.45 கோடி நிதி ஓதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், 25ம் தேதி முதல் புதிய ஐந்து அடுக்கு கட்டடம் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது, துரித வேகத்தில் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்