Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

ஜுலை 06, 2023 04:21

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளை நியமனம் செய்து, மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக குற்றாலம் பேரூராட்சி கவுன்சிலர் டி.ஆர்.கிருஷ்ணராஜாவும், துணை அமைப்பாளர்களாக மு.சிவக்குமார், சே.ஐவேந்திரன், த.கிருஷ்ணராஜ், ச.சுப்பிரமணியன், மு.முகமது அப்துல்ரஹீம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணராஜா மற்றும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்