Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இராஜபாளையம் மகளிர் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க கோரிக்கை மனு

ஜுலை 06, 2023 07:40

இராஜபாளையம்: சென்னையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மாமன்னன் திரைப்படம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என வாழ்த்துக்களை கூறினார். 

மேலும்  இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு  பல்வேறு பணிகளை நிறைவேற்ற கோரிக்கை மனுவையும் கொடுத்தார். 

அதில் இராஜபாளையம் நகரில், போக்குவரத்து நெரிசல் அதிகளவிலுள்ளதால் அதனைக்குறைக்க MPK.புதுப்பட்டி விலக்கிலிருந்து அமிழ் ஹோட்டல் வரை புறவழிச்சாலை அமைக்கவும், இராஜபாளையம் தொகுதியில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் .

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைத்து அய்யனார் கோவில் மற்றும் சாஸ்தா கோவில் அணைப்பகுதிகளை சுற்றுலா தளமாக தரம் உயர்த்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராஜபாளையம் தொகுதியில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய குளிர்சாதன (AC) வசதியுடன்  கூடிய திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை  வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்