Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பி.டி.ஓ.,அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் 

ஜுலை 13, 2023 04:13

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேப்பு முகாம் நடந்தது.

பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில், பி.டி.ஓ., லோகமணிகண்டன் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்டத்தினை 150 நாட்களாக அதிகரித்து வழங்கிட  வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு எனவும், இதுகுறித்து உரிய களஆய்வு நடந்து வருவதாகவும், மாற்றுத் திறனாளி பயனாளிகள் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலை செய்தால் போதும் எனவும் பி.டி.ஓ., தெரிவித்தார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் பாதி நேரம் வேலை செய்தால் போதும் எனவும், பிற்பகல் வருகை பதிவினை பதிவு செய்தவுடன் மாற்றுத்திறனாளிகள் மட்டும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்க ஏற்கனவே பல ஆய்வு கூட்டங்களின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்ட விபரமும் தெரிவிக்கப்பட்டது. மீதி ஏதேனும் மாறுபாடுகள் கண்டறியப்பட்டால் நிர்பந்தம் செய்யப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் வறுமையின் காரணமாகவும், வேறு வேலைக்கு செல்ல முடியாததன் காரணமாகவும் ஒரே குடும்பத்தில் தனித்தனி அட்டை வழங்கினால் ஆளுக்கு நூறு நாட்கள் வழிவகை உண்டா என்ற கேள்விக்கு, சட்டத்தின் சரத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என்ற விதிமுறைகளின் படியே அட்டை வழங்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்