Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயில்களை விரட்ட செயல் விளக்கம் 

ஜுலை 13, 2023 04:16

எலச்சிபாளையம்: கவுண்டம்பாளையம் கிராமத்தில், விவசாய நிலத்தில் மயில்களால் ஏற்படும் சேதத்தினை தடுக்கும் வகையில், வேளாண் அலுவலர்கள் மூலம் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் எலச்சிபாளையம் வட்டாரம், 67  கவுண்டம்பாளையம் கிராமத்தில் மயில்களால் ஏற்படும் சேராத்தினை தடுக்கும் வகையில் வேளாண் அலுவலர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்ட செயல் விளக்கத்திற்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி முன்னிலை வகித்து, வேளாண் பயிர்களில் சேதம் அடையாமல் தடுக்க ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி மயில்கள், எலிகள், முயல்கள், காட்டுபறவைகள் அண்ட விடாமல் பயிர்களை பாதுகாப்பது மட்டும் அல்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்பட்டு வருகின்றது என்று செயல் விளக்கி கூறினார்.

மேலும் இந்த செயல் விளக்கத்தினை உதவி வேளாண்மை அலுவலர் சக்திவேல் செய்து காட்டினார். துணை வேளாண்மை அலுவலர் ராமசாமி கலந்துகொண்டு வேளாண்மை துறை திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

இதில் உழவன் செயலி மற்றும் இதற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் சக்திவேல் செய்திருந்தார். அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்