Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரத்தில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் 

ஜுலை 13, 2023 04:23

மல்லசமுத்திரம்:  மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

மேலும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 1250 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில், சுரப்பி ரகம் ரூ.6360 முதல் ரூ.7005 வரையிலும், பி.டி.ரகம் ரூ.6050 முதல் ரூ.6940 வரையிலும், கொட்டுபருத்தி ரூ.3516 முதல் ரூ.4516 வரையிலும் என ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

மேலும்14 முதல் வெள்ளிக்கிழமை தோறும் மாமுண்டி உபகிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 17ம்தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மொரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பாலமேடு உபகிளையிலும் பருத்தி ஏலம் நடைபெறும் என மல்லசமுத்திரம் மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்