Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் : கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் துவக்கி வைத்தார் 

ஜுலை 14, 2023 01:33

நாமக்கல்: தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர் என்றும் 
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். 

பின்னர் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை திறந்து வைத்து, நாமக்கல் பெரியப்பட்டி மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை, நாமக்கல் எடுத்த கொண்டிசெட்டிப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு மொத்தம் ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். 

அப்போது விழாவில் பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார்,  தமிழ்நாடு அரசு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதால் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விகளில் அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். 

எனவே அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவ மாணவிகள் பெற்று சிறந்த முறையில் கல்வி கற்று பள்ளிக்கும் நமது நாட்டிற்கும் பெருமை தேடித் தர வேண்டும். 
ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்று ஆசிரியர் பெருமக்களை மதித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் K.R.N.இராஜேஸ்குமார் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.சாந்தி, நகர மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி, நகரக் கழக செயலாளர் ராணாஆனந்த், அ.சிவகுமார், மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத், துணை அமைப்பாளர் எம்பரர் வ.இளம்பரிதி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்