Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் தி நவோதயா பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா

ஜுலை 14, 2023 01:46

நாமக்கல்: நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-24 ஆம் கல்வியண்டிற்கான மாணவ தலைவர் தேர்தல், துணைத் தலைவர், மாணவ வகுப்புத் தலைவர், மாணவ வகுப்புத்தலைவி, கலாச்சாரம், ஒழுக்கம், உணவு மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

அதில் வெற்றி பெற்ற மாணவ தலைவர் அ.கிருஷ்ணசுவாமி ஓஐஇ, மாணவ தலைவி தன்யருபஸ்ரீ, துணை மாணவத் தலைவர் அபிகிருத்திக், ஐஓஇ துணை மாணவத் தலைவி சார்வி ஐஓ மற்றும் வகுப்புத் தலைவர்கள், வகுப்புத் தலைவிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் ஆகியோர் பள்ளி இசை குழுவினரால் அழைத்து வரப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது.

பள்ளியின் பொருளாளர் கா.தேனருவி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்தி “சிறந்த தலைவர்களாக எதிர்காலத்தில் தங்கள் சேவைகளை நாடு போற்றும் வகையில் அர்ப்பணிப்போடு நாட்டிற்கு தொண்டாற்றி மகாத்மாவை போல அப்துல் கலாமை போல சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும என்று வாழ்த்தினார். 
தேர்தலை சிறப்பாக நடத்திய பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ் மற்றும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்து கூறி மாணவ, மாணவிகளுக்கு அணிவித்தார். பள்ளி முதல்வர் மற்றும்
ஆசிரியர்கள்; அனைவரும் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார். 

இந்த தேர்தல் பற்றிய கருத்துகளை மாணவ-மாணவியர்களிடம் கேட்டபோது இது நமது ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் பற்றிய முழு அறிவையும், அனுபவத்தையும் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிய பெருமிதத்தையும் அளித்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர். இறுதியாக பள்ளி மாணவ தலைவர் கிருஷ்ணசுவாமி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்