Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் அரசு கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி வகுப்பு துவக்க விழா

ஜுலை 14, 2023 01:55

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு தேர்வாணைய தேர்வு பயிற்சி (டி.என்.பி.எஸ்.சி, குரூப் 4) வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி மையம் சார்பில், தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி நான்கிற்கான (டி.என்.பி.எஸ்.சி, குரூப் 4) இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா, கல்லூரி முதல்வர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி முன்னிலை வகித்தார். சேலம் மண்டல வேலைவாய்ப்பு திறன் பயிற்சி துணை இயக்குனர் மணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது, மாணவ, மாணவியர் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும் எனவும், பாடங்களை எவ்வாறு திட்டமிட்டு படிக்க வேண்டும் எனவும் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவ மாணவியர், தங்களது பெயரினை பதிவு செய்து பயிற்சி துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி தொடர்ந்து 75 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி அலுவலர் வெஸ்லி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்