Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெட்டலா தனியார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் ச.உமா துவக்கி வைத்தார்

ஜுலை 15, 2023 11:38

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மெட்டலா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த அறிவியல் கண்காட்சியில் 1,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்ட தங்களது படைப்புகளை காட்சிப் படுத்தினார்கள். சுமார் 2,000 க்கும்
மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். இந்த அறிவியல் கண்காட்சியில் வேதியியல், உயிரியல், இயற்பியல், இயற்கை வளங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த படைப்புகளை கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர் சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைப்பதற்காக காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்து,  கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்குவதற்கு தேவையான குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பிடம் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரி முதல்வர் முனைவர் பாரதி, லயோலா கல்லூரி முதல்வர் முனைவர் சாமூவேல் ஜெயசீலன், லயோலா கல்லூரி செயலாளர் ஆல்பர்ட் வில்லியம், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் உட்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்