Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் காஸ்டியூம் டிசைனிங் நேரடி பயிற்சி

ஜுலை 15, 2023 11:46

குமாரபாளையம்: சேலம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் மாணவிகளுக்கு பல்வேறு ஏற்றுமதி தொழிற்சாலைகளில் நேரடி தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் பெரியார் பல்கலைக்கழத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கல்லூரி மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் மாணவிகளுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் அந்த வரிசையில் முதலாம் ஆண்டு காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் மாணவிகள் 30 பேர் ஸ்ரீகிரி நூற்பாலையில் நேரடி தொழிற்பயிற்சியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் அடிப்படையில் மிக்ஸிங், புளோரும், காடிங், ரோவிங், ஸ்பின்னிங், கோன் மைண்டிங், பேக்கிங் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் பல்வேறு உற்பத்தி ஸ்தலங்களில் மாணவிகள் காலை முதல் மாலை வரை நேரடி பயிற்சி பெற்றனர்.

இதில் ஸ்ரீகிரி நூற்பாலையின் மேலாளர் மாரிராஜா, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேசன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், பேராசிரியர் பிரபுகுமார், பேராசிரியை சத்யா, ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கோபால்சாமி ஆகியோர் மாணவிகளுக்கு பஞ்சு முதல் நூல் வரையிலான உற்பத்தி தொழில் நுட்பத்தை தொழிற்சாலையில் நேரடியாக கற்றுத் தந்தனர். 

இதில் மாணவிகள் 100% விஸ்கோஸ் செயற்கை இழை பஞ்சு மூலம் நூல் உற்பத்தியாகும் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தனர். விஸ்கோஸ் செயற்கை இழை நூல் இளம் பெண்களுக்கான துணிகளை தயாரிக்க பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிற்சாலையின் நேரடியாக பயிற்சி பெற்ற காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் மாணவிகளை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தாளாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி, சங்ககிரி வளாக தலைமை செயல் அதிகாரி வரதராஜீ, கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ்குமார், டெக்ஸ்டைல் பேஷன் டிசைனிங் மற்றும் காஸ்டியூம் டிசைனிங் பேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், ஸ்ரீகிரி நூற்பாலையின் நிர்வாக இயக்குநர்கள் செந்தில்குமார், ரமேஷ், ஜெயக்குமார், மேலாளர் மாரிராஜா ஆகியோர் பரிசுகளையும் தொழிற் பயிற்சிக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்