Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி கல்லூரியில் காஸ்டியூம் டிசைன், நியூட்ரிசன் திறன் மேம்பாட்டு நிகழ்வு

ஜுலை 15, 2023 11:49

நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காஸ்டியூம் டிசைன் பேசன் மற்றும் நியூட்ரிசன் டயட்டிக்ஸ் துறைகளின் சார்பில், “பாடப்பிரிவுகளின் முகவுரை மற்றும் பல்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் துவக்கி வைத்தார். முதல்வர் எம். ஆர்.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.

இதில் மாணவியர் படித்து முடித்த உடன் உடனடி வேலைவாய்ப்பினை அள்ளித் தரும் இப்பாடப்பிரிவுகளின் சிறப்பம்சங்கள், தலைமைப்பண்பினை திறம்பட மேம்படுத்தும் திறம், ஆளுமை முன்னேற்றம், குழுக்கலந்துரையாடல் நிகழ்வு இவற்றோடு கீரைகள், காய்கறிகளில் இருந்து ஆபரணங்கள் தயாரிப்பு, துணி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புதிய பயன்பாட்டுப் பொருட்கள் உருவாக்கம் ஆகிய தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் இயக்குநர் உயர்கல்வி அரசுபரமேசுவரன்,  துறைத்தலைவர்கள் கே.புனிதா, ஆர். ரூபா, இத்துறைகளின் பேராசிரியப் பெருமக்கள் கே.பி.தீபிகா, ஏ.பி.பவித்ரா, பி.ஸ்ரீரேணுகாதேவி, வீ.சௌமியா, ஆர்.சண்முகப்பிரியா, நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் உட்பட இத்துறைகளின் மாணவியர் மிக ஆர்வமுடன்
பங்கேற்றனர்.

மேலும் டிரினிடி மகளிர் கல்லூரியின் தலைவரும், நாமக்கல் - தென்பாண்டியன் தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான கே.நல்லுசாமி தன் உரையில் குறிப்பிடுகையில், இந்தியாவில் விவசாயத் துறைக்கு அடுத்து அதிக நபர்கள் பணியாற்றுவது ஜவுளித் துறையில் தான். காஸ்டியூம் மற்றும் நியூட்ரிசன் பாடப்பிரிவுகளின் மாணவியரின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமையப் பெற்றுள்ளது என்றும், மகளிர் சுய தொழில் புரிய இவ்விரண்டு துறைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.

தலைப்புச்செய்திகள்