Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிக்கு  பொதுமக்கள் கோவில்களில் வழிபாடு

ஜுலை 15, 2023 11:50

நாமக்கல்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் ஆராய்ச்சிகளில் முழுமையாக ஈடுபட்டு சந்திரயான் 3 ஐ இன்று மதியம் 2 : 35 க்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. 

இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் கைபேசிகளிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை பார்த்தும் கேட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

குறித்த நேரத்தில் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டு இருந்ததை அவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை கைகள் தட்டி வெளிப்படுத்தினர். மேலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து சந்திரயான் 3 வெற்றிகரமாக பணியை மேற்கொள்ள வழிபாடு செய்தனர். 

இராசிபுரம் அடுத்துள்ள அழியா இலங்கை அம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சென்று பணியை மேற்கொள்ள சிறப்பு பூஜைகள் செய்தனர். 

நமது நாட்டு விஞ்ஞானிகள் இஸ்ரோ 3 விண்களத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவைகள்  செய்துள்ளதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதற்கு பெருமளவில் ஊக்கமளித்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்தும் ராசிபுரம் வட்டார பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மத்திய அரசுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில்,  பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.தமிழரசு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் மாவட்ட துணை தலைவர் என்.எஸ். ஹரிஹரன், வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் ப.அருள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்