Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாசுதேவநல்லூரில் நதிகள் அறக்கட்டளை சார்பாக நாட்டுப்புற கலைத் திருவிழா

ஜுலை 16, 2023 07:46

வாசுதேவநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியனில் உள்ள நதிகள் அறக்கட்டளை சார்பாக நாட்டுப்புற கலைத் திருவிழா நகரம் ஊராட்சியில் உள்ள செந்தூர் முருகன் மகாலில் வைத்து நடைபெற்றது.

இவ்விழாவினை பின்னணி பாடகர் கருங்குயில் கணேசன் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக விருதுகள் வழங்கி கௌரவிக்க மக்கள் சேவகரும், மாற்றம் முன்னேற்றம் அறக்கட்டளை நிறுவனர் தென்காசி ஆனந்தன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சென்னை, திருவாரூர், பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி , கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கும்மி பாட்டு கலைஞர்கள், கோலாட்ட கலைஞர்கள், ஒயிலாட்டம் கலைஞர்கள், பரத நாட்டிய  கலைஞர்கள், சிலம்பாட்ட கலைஞர்கள் என  பல்வேறு கலை பிரிவுகளை சார்ந்த 150 மேற்பட்ட கலைஞர்களுக்கு சான்றிதழ்களும், புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் பொறித்த  கேடயங்கள் நினைவுச் சின்னமாக வழங்கி கௌரவித்தனர்.  

மேலும் விழாவில் ஆசிரியர் கலைமாமணி தாஜ்தீன் , தொழிலதிபர் கருப்பசாமி, தமிழ்நாடு நாட்டுப்புற மாநில அமைப்பு செயலாளர் சுபாஸ் சந்திரபோஸ், தொழிலதிபர் என்எம்எஸ். விவேகானந்தன், செல்வக்குமார்  , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த சிறப்பான விழாவினை நதிகள் அறக்கட்டளை நிறுவனர் பீ.மா.ராம்ராஜ்  ஏற்பாடு செய்திருந்தார். 

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தென்காசி அ.ஆனந்தன், பேசுகையில் தமிழகத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிராமப் புற கலைகளின் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் வாழ்க்கையின் சிறப்புகளையும் நம்மால் முடிந்த வரை இந்திய முழுவதும் எடுத்துச் சென்று உலகளவில் பெருமை தேடித்தர அனைவரும் ஒன்றுகூடி பாடுபடுவோம் என்றுக்கூறினார்.

இந்நிகழ்ச்சியினை சிந்தாமணி. சீனு ஸ்டுடியோ தேவா தொகுத்து வழங்கினார்.

 

தலைப்புச்செய்திகள்