Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல்

ஜுலை 16, 2023 08:10

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் குற்றாலத்தில் நடைபெற்றது.

இதில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் அறிவுறுத்தலின் படியும், தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தகவல் தொழில் நுட்ப அணிக்கான தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் குற்றாலத்தில் நடைபெற்றது.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ் எம். சரவணார் வரவேற்றார். துணை அமைப்பாளர்கள் அழகுதமிழ், சிங்கத்துரை, ஸ்ரீதர்,கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

பின்னர் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளரும், மதுரை மண்டல செயலாளருமான மதுரை பாலா கலந்து கொண்டு, தென்காசி தெற்கு மாவட்ட  தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் தேர்வுக்கான நேர்காணலை நடத்தினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், பேரூர் செயலாளர்கள் ஜெகதீசன், சுடலை, அழகேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜாமணி, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர்சுப்பிரமணியன்மற்றும் மாவட்ட முழுவதிலும் இருந்து அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள், மகளிர்கள் ஆர்வமுடன் நேர்காணலில் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்