Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெத்தநாடார்பட்டி ஜீவா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா

ஜுலை 16, 2023 08:24

பாவூர்சத்திரம்: பெத்தநாடார்பட்டி ஜீவா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி ஜீவா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளி தாளாளர் சௌ.இராதா தலைமை வகித்தார். காமராஜர் வேடமணிந்து மாணவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

பின்னர் மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கில, ஹிந்தி பேச்சுப் போட்டிகள், கவிதை, ஓவியம், நாடகம் மற்றும் மாறுவேடப்போட்டிகள் நடத்தப் பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போட்டிகளை பள்ளி முதல்வர் எஸ்.கவிதா சாமுவேல் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்