Tuesday, 25th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் போற்றி பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா

ஜுலை 17, 2023 06:00

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சென்னை கமலசாய் மீடியா மற்றும் சங்கரன்கோவில் ஆர்யா டிவி சார்பில் ஸ்ரீ சங்கரநாராணர் கோமதி அம்பாளை போற்றி பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.  

இதில் ஆர்யா டிவி ஆனந்தராஜ் வரவேற்றார். ஆர்யா டிவி சுந்தர் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி தனசேகர், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி, ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிச்சாமி ,ஆர்யா குழுமம் செல்லதுரை, திரை இசை இயக்குனர் காந்திதாசன் ஆகியோர் கலந்து கொண்டுனர். 

மேலும் இதில் சொக்கம்பட்டியைச் சேர்ந்த சாது சுவாமி சிவானந்தா கலந்து கொண்டு குறுந்தகடுகளை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் புகழ் பெற்ற வடக்குஅழகுநாச்சியார்புரம் மூத்த வில்லிசை ஆசிரியர் ஐயப்பன், தொழிலதிபர்கள் பிஜிபி ராமநாதன், அனுசியா மாரிமுத்து, ஐயப்பா சேவா சங்கத் தலைவர் மணி ,ஆசிரியர் ஆத்திவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஏற்பாடுகளை மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியம் செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்