Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 54வது கல்கி ஜெயந்தி விழா

ஜுலை 17, 2023 07:33

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை பரப்பி வருகின்றனர். 1969 ஆம் வருடம் ஜுலை 21-ம் நாள் மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால்வைத்த போது அமெரிக்காவில் சிக்காகோ பட்டணத்தில் பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய பக்தர்களுக்கு தனது விஸ்பரூபத்தை காண்பித்து தன்னை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வினை நினைவு கூர்ந்து 54 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். 

இந்தியாவில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த மக்களும், அனைத்து மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கல்கி ஜெயந்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவர். மேலும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சாதி, மத, இன, நிறம், பேதமின்றி இங்கே ஒன்று கூடுவார்கள். 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தேசிய ஒருமைப்பாடு சர்வ சமய மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மலையாளம், கன்னடம் மொழிகளில் நூல் வெளியிடப்பட்டது. முதல் நூலை அவ்வை நடராஜனின் மகன், அவ்வை அருள் வெளியிட திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எம்.கே.எம்.முகம்மது ஷபி பெற்றுக் கொண்டார். 

இந்நிகழ்விற்கு திருநெல்வேலி ம.தி.தா. இந்து கல்லூரி கல்வி கழகத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஞானபிரகாசம், அருட்பெறும் ஜோதி வள்ளலாரின் வாரிசான மூத்த வழக்கறிஞர் கருணாநிதி, தொழில் அதிபர் குப்புசாமி, டி.கே.எஸ்.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் என் லாறி அனைவரையும் வரவேற்றார். ஆஸ்ரமத்தின் உபத்தலைவர் லியோ பால் சி. லாறி நன்றி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்