Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

ஜுலை 17, 2023 08:18

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. 

இதில் மாநில இலக்கிய அணி செயலாளர் பொன் கணேசன் மாவட்ட அமைப்புச் செயலாளர் ராமரத்தினசாமி கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், கீழப்பாவூர்வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஞான செல்வன், சுரேஷ், முருகன் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சின்ன ராஜா நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாரிமுத்து மணிகண்டன் பாக்கியராஜ் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மேலும் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கவிக்குயில் எஸ். செல்வன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் இசைக்கிராஜ் அன்பழகு சுப்பிரமணியபிரபு செல்வன் ராமசாமி குமாரசாமி முருகன் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்