Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

ஜுலை 18, 2023 09:22

இராஜபாளையம்: இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ்நாடு  நாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை வருவாய் துறை சார்பில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் அதிகாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்.

கடந்த 1967-ம் ஆண்டு ஜூலை 18- ம் தேதி முதல்வராக இருந்த அண்ணாதுரை சென்னை மாகாணம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என பெயர் மாற்றி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாடு பெயர் மாற்றம் கொண்டுவர 76 நாட்கள் தனது வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 
விருதுநகர் மண்மலை மேடு பகுதியைச் சார்ந்த கண்டன் சங்கரலிங்கனார் தியாகத்தை போற்றும் வகையில் ஜூலை 18 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

இதனை அடுத்து இந்த ஆண்டு தமிழ்நாடு நாளை முன்னிட்டு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களின் பேரணி மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து மாணவ, மாணவியர்களின் தமிழ்நாடு நாள் பேரணி நடைபெற்றது. இதனை வட்டாச்சியர் ராமச்சந்திரன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

இந்த பேரணியானது ஜவகர் மைதானத்தில் துவங்கப்பட்டு கலை மன்றம், தென்காசி சாலை, காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்ற பேரணியானது இராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு நாள் குறித்தும், தமிழ் அறிஞர்கள் மற்றும் தியாகிகள் குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இப்பேரணியில் இராஜபாளையத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்ப்பட்ட மாணவ  மாணவியர்கள் வருவாய்த்துறையினர் பள்ளி கல்வித்துறையினர் இராஜபாளையம் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்