Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பெண்கல்வி எழுச்சி மற்றும் முப்பெரும் விழா

ஜுலை 20, 2023 10:27

சேலம்: சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தாளாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தின விழாவை பெண் கல்வி எழுச்சி தின விழாவாக, இலவச மருத்துவ முகாம்களுடன் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வளாகங்களில் 24,000 மாணவிகள் கொண்டாடினர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய மகளிர் நிறுவனமான விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 24,000 மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்வி நிறுவனங்களின் தாளாளரின் பிறந்த தினத்தை பெண் கல்வி எழுச்சி தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான பெண்கல்வி எழுச்சி விழா திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வளாகங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் இலவச மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கொண்டாடப்பட்டது.

பெண் கல்வி எழுச்சி தின விழாவிற்கு நிர்வாக இயக்குநர் திருமதி கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் டாக்டர் கிருபாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் சொக்கலிங்கம், சங்ககிரி வளாக தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜு, விவேகானந்தா மகளிர் கல்வி குழுமத்தில் பணியாற்றும் 28 கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குநர்கள்,
டீன்கள் முன்னிலை வகித்தனர்.

துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவிகள், ஊழியர்கள் பெரும் திரளாக இந்த விழாவில் கலந்து கொண்டு தாளாளர் டாக்டர் மு.கருணாநிதிக்கும் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதிக்கும் மாலைகள், பூங்கொத்துகள், பொன்னாடைகள், பழங்கள் வழங்கி
ஆசீர்வாதம் பெற்றனர்.

சங்ககிரி வளாகத்தில் விவேகானந்தா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. 4,000 மாணவிகளுக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களின் பெற்றோர்களுக்கும் இலவச மருத்துவ சேவைக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இந்த இலவச பல் மருத்துவ முகாமினை விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகளின் இயக்குநர் கேப்டன் கோகுலநாதன் துவக்கி வைத்தார். 21 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழு இந்த பல் மருத்துவ முகாமை நடத்தினர். அதுமட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்தில் நடமாடும் பல் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

முகாமின் நிறைவு விழாவில் 4,000 மாணவிகளுக்கு சங்ககிரி வளாக தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜீ, கல்லூரி முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆனந்தகுமார், டாக்டர் அழகுசுந்தரம், டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் மாலதி, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேசன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் கேக் மற்றும்
இனிப்புகள் வழங்கினர். ஒட்டுமொத்த குரலில் 4,000 மாணவிகள் தங்கள் கல்வி தந்தையான விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் மு.கருணாநிதிக்கு பிறந்த வாழ்த்துப் பாடல் பாடினார்.

தலைப்புச்செய்திகள்