Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிபாளையம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியத்தில்  மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு

ஜுலை 21, 2023 11:27

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும் நலவாழ்வு மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளிப்பாளையம் நகராட்சி அமுதம் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  ஆய்வு மேற்கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்ட டோக்கன் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவ பிரிவு, புற நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் குமரன் நகர் ஓடையில்  கனியனூர் மற்றும் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்கும் சாலை அமைக்கும் பணியினை‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.‌

மேலும், தட்டாங்குட்டை ஊராட்சியில் ஒப்பளிக்கப்பட்ட நிதி வருவாய் திட்டத்தின் கீழ் எளையம்பாளையம் மயானம் முதல் பாறைக்காடு வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வீசாணம், மரூர்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாமக்கல் புறவழிச்சாலை அமையவுள்ளதையொட்டி தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர் மு.தாமரை, குமாரபாளையம் வட்டாட்சியர், பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்