Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குப்பை இல்லா தூய்மை நகராக்க நடவடிக்கை 

ஜுலை 22, 2023 12:42

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாக்கடை தூர் வாரும் பணிகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்படும் என்றும், குப்பைகளை சேகரிக்க மின்சார வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு தூய்மையான நகராக பராமரிக்கப்படும் என்றும், நகரில் வைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர்  நளினி சுரேஷ்பாபு அறிவித்துள்ளார்.

திருச்செங்கோடு  நகராட்சி நகர் மன்ற கூட்டம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை தாங்கி, திருக்குறள் வாசித்து துவக்கினார். ஆணையாளர் சேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாலராக சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு, நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க கோரிக்கை வைத்தார்.

கூட்டத்தில் பேசிய நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகள் கொண்ட பெரிய நகராட்சி ஆகும் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. 

சாக்கடை தூர்வாரும் பணிகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்படும் என்றும், குப்பைகளை சேகரிக்க மின்சார வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு தூய்மையான நகராக பராமரிக்கப்படும், நகரில் வைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  நகர்மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர்  நளினி சுரேஷ்பாபு கூறினார். 

சிறப்பு அழைப்பாலராக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும்போது, நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் தரமாகவும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் எனவும், நகர்மன்ற உறுப்பினர்கள் பணிகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

தலைப்புச்செய்திகள்