Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

ஜுலை 22, 2023 01:06

குமாரபாளையம்: பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் நாமக்கல், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கரும்புகளை டன் கணக்கில் வழங்கி வருகின்றனர். 

இந்த சர்க்கரை ஆலையில் தாங்கள் வழங்கும் கரும்புக்கு தற்பொழுது மத்திய அரசு டன் ஒன்றுக்கு 3150 ரூபாய் வழங்கி வருகிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. நாடு முழுவதும் உள்ள 5 கோடி விவசாயிகளின் வாழ்வை வஞ்சித்துள்ளதாகவும், எனவே டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழுவதும் சுமார் 25 மையங்களில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கட்டணம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதன் ஒரு கட்டமாக பொன்னி சர்க்கரை ஆலை முன்பு தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவிந்திரன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் மணிப்பூரில் நடைபெறும் இனக் கலவரத்தை கண்டித்து அங்கு  வாழும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைப்புச்செய்திகள்