Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்த போலீசார்

ஜுலை 22, 2023 01:15

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் பங்கேற்று போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து, மரக்கன்றுகள் நட்டனர். பள்ளி மாணவர்களிடையே போதை வழக்கம் வராமல் தடுத்திட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். 

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:

பள்ளிப்பருவத்தில் நல்ல பழக்க  மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, ஹான்ஸ், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்ற போதை பொருட்களை உபயோகப்படுத்தகூடாது. அவ்வாறு அதனை வற்புறுத்தி வாங்க சொல்லும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தாருங்கள் என்றார். 

இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு பயிற்சிக்கு தேவையான பந்துகள், வலைகள், உள்ளிட்டவைகள் வழங்கி, பள்ளி வளாகத்திற்குள்  50 மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில் இன்னர்  வீல் கிளப் நிர்வாகிகள், பி.டி.ஏ. நிர்வாகிகள் நடராஜ், வாசுதேவன், தி.மு.க. நிர்வாகிகள் தனசேகரன், நல்லசாமி, சுந்தரராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்