Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாரணீய ஆசிரியைகளுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்

ஜுலை 28, 2023 11:51

திருச்செங்கோடு: நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரணீய ஆசிரியைகளுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஏழு நாட்கள் நடைபெற்றது. 

துவக்க விழாவில் முகாம் செயலர் து.விஜய் வரவேற்புரை ஆற்றினார். சாரண இயக்க மாவட்டத் தலைவரும், வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலருமான முனைவர்.எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். 

மேலும் விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலரும் சாரண இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவருமான டாகடர்.மு.கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமினைத் துவக்கி வைத்தார்.  கல்வி நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் திரு.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். 

இதனை தொடர்ந்து சாரண சாரணீயர் இயக்கத்தின் சாரணீயர் பிரிவில் உள்ள 3 முதல் 5 வயதினருக்கான முயல்குட்டிகள், ஐந்து முதல் 10 வயது வரையுள்ள மாணவியருக்கான நீலப்பறவையினர், 10 முதல் 15 வயது வரையுள்ள மாணவியர்களுக்கான சாரணீயர், 15 முதல் 25 வயது வரையுள்ள மாணவியர்களுக்கான  திரிசாரணீயர் என நான்கு படைகளை நடத்தும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட அடிப்படைப்பயிற்சி முகாமில்  சுமார் 80 பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

முகாமினை தேசியத் தலைமையகப் பாடத்திட்டத்தின் படி நடத்தப்பட்ட இம்முகாமினை தேசிய அளவிலான பயிற்சியாளர்கள்  சரஸ்வதி, மஞ்சுளா, ராதிகா திரிவேணி, மலர்விழி ஆகியோர் முகாம் தலைவர்களாக இருந்து நடத்தினர். ரூத்பேபி, ஷீபா, மங்கையற்கரசி ஆகியோர் உதவியாளர்களாக செயல்பட்டனர். மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம் (தொடக்கக் கல்வி), குமரேசன் (இடைநிலைக் கல்வி), கணேசன் (தனியார் பள்ளிகள்), திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலர் லா.பிரபுக்குமார் ஆகியோர் முகாமினைப் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் மாவட்ட திரிசாரண ஆணையரும், வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முனைவர் டி.ஓ.சிங்காரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதில் மாநிலப்பயிற்சி ஆணையர் செல்வி.அருள்மேரி, பயிற்சித்திடல் செயலாக்கக் குழுமச்செயலரும், கஸ்தூரிபா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான க.சிதம்பரம், கல்வி நிறுவன முதல்வர் முனைவர்.பேபி ஷகிலா, தலைமையிடத்து ஆணையர் பி.வி.குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க கல்விநிறுவன இயக்குனர்கள் குமரவேல், சசிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாமக்கல் செயலர் ரகோத்தமன் நன்றி கூறினார்.

பின்னர் சர்வ சமய வழிபாட்டுடன் முகாம் இனிதே நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவன துணை முகாம் செயலர் து. விஜய், மாவட்ட உதவிச்செயலர்கள் சு.கோபி, தீபக், மணியரசன், கல்விநிறுவன திரிசாரணீய ஆசிரியைகள் பொ.நித்யா, அனுஷா மற்றும் கல்லூரியின் திரிசாரணீயர்கள் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.

தலைப்புச்செய்திகள்