Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க முகாம்

ஆகஸ்டு 02, 2023 11:39

குமாரபாளையம்: குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது.  

இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்