Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆட்சியர்  உமா, பொன்னுசாமி மஞ்சள் பைகள் வழங்கல் நிகழ்ச்சி

ஆகஸ்டு 02, 2023 11:50

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் கொல்லிமலை வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி  முன்னிலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இன்று மற்றும் நாளை  மற்றும் 03.08.2023 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் வல்வில் ஓரி விழா – 2023 தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

வல்வில் ஓரி விழாவையொட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.

         கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.  

இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டுவரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்.

சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும்.கடைகளில் ஒருமுறை பயன்டுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். எனவே கடை உரிமையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும்  அனுமதி கிடையாது என தெரிவித்தார். 

தொடர்ந்து,  சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளியில் வல்வில் ஓரி விழா 2023 முன்னிட்டு, கொல்லிமலை மற்றும் செம்மேடு அரப்பளீஸ்வரர் கோவில் பகுதிகளி தூய்மைப்படுத்தும் முகாமினை துவங்கி வைக்கும் விதமாக காரவள்ளியில் தூய்மைப்படுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வுகளில் மாவட்ட வன அலுவலர் திரு.ராஜாங்கம் இ.வ.ப., மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் திருமதி.சுமித்ரா பாய், ரெட் கிராஸ் திரு.இராஜேஸ் கண்ணன், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்