Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாசம் பொதுநல அமைப்பினருக்கு உதவி வருபவர்களுக்கு பாராட்டு

ஆகஸ்டு 07, 2023 10:35

குமாரபாளையம்: குமாரபாளையம் பாசம் பொதுநல அமைப்பினருக்கு உதவி வருபவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

குமாரபாளையம்  பாசம் முதியோர் இல்லத்திற்கு வாரம் தவறாமல் ஒருவேளை உணவு வழங்குபவர்களான  கௌரி மெஸ் ராஜா, வேல்முருகன் ஹோட்டல் ஈஸ்வரன்,  சரவணன் ஹோட்டல் சரவணன், மாதம் ஒரு சிப்பம் அரிசி வழங்கும் அனிதா பேட்டரி அண்ட் எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் உரிமையாளர் பிரதீப் குமார்,  வாரம் தவறாமல்  அசைவ உணவிற்கு உதவும் கோழிக்கடை சீனிவாசன், கோபி சிறுவலூரைச் சேர்ந்த சுப்பிரமணியம், ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா அமைப்பாளர் குமார் தலைமையில் நடந்தது.

மேலும் உதவி புரியும் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி, நினைவு பரிசு வழங்கப்பட்டது. எஸ்.ஐ. சந்தியா உள்பட பலர் பங்கேற்றனர்

தலைப்புச்செய்திகள்